மதுரை அருகே மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை..!

மதுரை அருகே மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை..!
X

வெடித்து இருக்கும் மின் கம்பம்.

சோழவந்தான் அரசு பெண்கள் பள்ளி அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மிகவும் ஆபத்தான நிலையில் முழுதும் சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என்ற அச்சம் மாணவிகள் மத்தியில் உள்ளது. சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளியின் வாசல் அருகிலேயே உள்ள இந்த மின்கம்பம் இருப்பதால் பள்ளிக்கு வரும் மாணவிகள், ஆசிரியர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு வரும் போதும் பள்ளியிலிருந்து வெளியேறிச் செல்லும்போது ஒரே நேரத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் கூட்டமாக வருவதால் மின்கம்பத்தால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மாணவிகள் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வரும் முன் காப்போம்

பிரச்னைகளை சுட்டிக்காட்டும்போதே அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் பிரச்னைகளை களைவதற்கு முனைந்தால் பெரிய ஆபத்து ஏற்படும் விளைவுகளைத் தடுத்துவிட முடியும். அதனால், இப்பகுதி கவுன்சிலர், அல்லது எம்.எல்.ஏ போன்ற மக்கள் பிரதிநிதிகளும், மின் வாரியமும் முற்பட்டு இந்த மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்களும், மாணவிகளும் மற்றும் இப்பகுதி பொதுமக்களும்.

நடவடிக்கை எடுப்பார்களா அரசு அதிகாரிகள்?

Tags

Next Story
ai solutions for small business