/* */

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்

மேனாள் பேராசிரியர் அனந்தராமன் கல்லூரி நிறுவனர் சுவாமி சித்பவானந்தரின் பண்பாட்டுக் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார்

HIGHLIGHTS

மதுரை அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கலாசார பயிலரங்கம்
X

சோழவந்தான் அருகேயுள்ள திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்ற கலாசார பயிலரங்கம்.

மதுரை மாவட்டம், திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் கலாசார தலைமை மையத்தின் சார்பில், தெலங்கானா செகந்திராபாத்தில் உள்ள சமஸ்கிருதி பவுண்டேஷனின் நிதி உதவியுடன் ஒரு நாள் அறிவியல் மற்றும் கலாசார கல்வி பயிலரங்கம் நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக குத்துவிளக்கு ஏற்றி இறை வணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. கல்லூரியின் அகதர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதிஷ்பாபு வரவேற்றார். விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் தலைமை உரை ஆற்றினார்.

நிகழ்ச்சியின் முதல் அமர்வில், மேனாள் பேராசிரியர் அனந்தராமன், கல்லூரி நிறுவனர் சுவாமி சித்பவானந்தரின் பண்பாட்டுக் கல்வி என்ற தலைப்பில் உரையாற்றினார். இரண்டாவது அமர்வில் மேனாள் துணை முதல்வர் மற்றும் விலங்கியல் பேராசிரியர் முனைவர் பார்த்தசாரதி இந்திய பண்பாட்டில் அறிவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நடந்த மூன்றாவது அமர்வில் ,வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் நாகேந்திரன் இந்திய பண்பாட்டின் பன்முகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்து பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் அருள்மாறன் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை, வேதியல் துறை உதவிப்பேராசிரியர் தர்மானந்தம் ஒருங்கிணைத்தார்.

பயிலரங்க முடிவில், கல்லூரியின் மழைநீர் சேகரிப்பு குட்டை, மூலிகை தோட்டம், பயோ கேஸ் தயாரிக்குமிடம், விவசாயத் தோட்டம், வழிபாட்டுக்கூடம், காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, மண்புழு வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு ஆகிய படிக்கும் போதே படிக்கும் போதே சம்பாதிக்கும் திட்டத்தின் படி நடக்கும் விவேகானந்த கல்லூரி மாணவர்களின் செயல்பாடுகளை பயிலரங்கில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.

Updated On: 22 March 2023 1:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!