அலங்காநல்லூரில் கவுண்டர் மகாஜன சங்கம் கூட்டம்

அலங்காநல்லூரில் கவுண்டர் மகாஜன சங்கம்  கூட்டம்
X

அலங்காநல்லூரில் நடந்த கவுண்டர் மகாஜன சங்க கூட்டத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

அலங்காநல்லூரில் நடந்த கவுண்டர் மகாஜன சங்க கூட்டத்தில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கல்லணை, தனியார் மஹாலில் கவுண்டர் மகாஜன சங்க 50-ஆவது மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு, சங்கத் தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்பழகன், பொருளாளர் சிதம்பரநாதன், ஆலோசகர்கள் சேகர், ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணைத் தலைவர்கள் நல்லியப்பன், தயாளன் ஆகியோர் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் 2022-23ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகள், நிர்வாக அறிக்கை, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, நடந்து முடிந்த 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை, சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான சங்கத்தின் திட்டங்கள் செயல் பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில், துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.

Tags

Next Story