அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம்
X

கொரோனா தடுப்பூசி முகாம்.

சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொரானா தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பேரூராட்சி 8.வது வார்டு கவுன்சிலர் டாக்டர்.எம்.வி.எம்.மருதுபாண்டியன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை தீபா வரவேற்றார். இதில் தமிழக அரசு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிசீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் போடப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!