மதுரை அருகே கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாகனம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைப்பு
பாலமேடு பேரூராட்சி சார்பில் நடமாடும் கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை எம்.எல்.ஏ வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனத்தை சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரூராட்சி மற்றும் சுகாதார துறை இணைந்து பொதுமக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்ட முறையை துவக்கி வைத்து தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து பொதுமக்கள் முன்னிலையில் எம்.எல்.ஏ வெங்கடேசன் பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் எம்.ஆர்.எம் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், கூட்டுறவு தலைவர் முத்தையன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமை தொடர்ந்து பேரூராட்சி சுற்றுசுவர் மற்றும் சாலைகளில் வரைந்துள்ள கொரோனா விழிப்புணர்வு ஓவியங்களை அவர் பார்வையிட்டார். மேலும் பொதுமக்களுக்கு முககவசம், கபசுரகுடிநீர், கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். இந்த முகாமில் பேரூராட்சி பணியாளர்கள், மருத்துவ குழுவினர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர், மகளிர் சுய உதவி குழு உட்பட பலர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu