மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டம்
X

வாடிப்பட்டியில்.கல்குவாரி அமைப்பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது

புதிய கல்குவாரி அமைப்பது தொடர்பாக வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் மக்கள் கருத்து கேட்டு கூட்டம் நடத்தப்பட்டது

மதுரை மாவட்டம் ,வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புதிதாக கல்குவாரி அமைப்பதற்கு மக்கள் கருத்து கேட்டு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை வகித்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.

வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் வரவேற்றார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் புகாரி உரிமையாளர்கள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், அமைக்க கூடாது என்று மற்றொரு தரப்பும் கருத்துகளை தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அனைவரின் கருத்துகளும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் ஷாலினி தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர் முத்து, உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஆண்டிபட்டி பங்களாவிலிருந்து, கச்சை கட்டி வழியாக பாலமேடு செல்லும் சாலையில், இருபுறங்களிலும, கல்குவாரியில், தொடர்ந்து ஜல்லிக் கற்கள் இயந்திரம் மூலம் உடைக்கப்பட்டு வருவதால், சாலைகளில் தூசிகள் கிளம்பி, இரு சக்கர வாகனத்தில் செல்வாராம், பாதசாரிகளும் கஷ்டப்படுகின்றனர்.

ஆகவே, கல்குவாரியில், கற்கள் உடைக்கும் போது தூசி கிளம்பிய வகையில், பாதுகாப்பை ஏற்படுத்த மாசு கட்டுப்பாட்டின் பொறியாளர் ஆர்வம் காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags

Next Story
ai platform for business