மத்திய அரசைக் கண்டித்து மதுரை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து மதுரை அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மதுரை அருகே  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Congress Party Agitation மத்திய அரசின் தேர்தல் பத்திர மோசடி மற்றும் ஸ்டேட் பாங்கைக் கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடந்ததினர்.

Congress Party Agitation

அலங்காநல்லூரில் காங்கிரஸ் கட்சியினர் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரத ஸ்டேட் வங்கி கிளை அமைந்துள்ளது. இந்த கிளை முன்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பாக, மத்திய மோடி அரசின் தேர்தல் பத்திர மோசடியைக்கண்டித்தும், பல்லாயிரம் கோடி தாரை கொடுத்த பாஜகவை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்தும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் ஆலத்தூர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர்கள் சுப்பாராயலு,காந்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசு மக்களை ஏமாற்றி 10 ஆண்டுகள் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் மக்கள் வரிப்பணத்தை வாங்கிக் கொண்டு எந்த ஒரு நலத்திட்ட உதவிகளும் இதுவரை செய்யவில்லை என்றும், தமிழக அரசுக்கு தரவேண்டிய நிதியை சரியான முறையில் தரவில்லை என்று கூறியும் விரைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மூடு விழா காண உள்ளதாகவும், ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தனர்.

இதில், நிர்வாகிகள் ஜெயமணி, ராமமூர்த்தி, மலைக்கனி, சரந்தாங்கி முத்து,மகளிர் அணி நிர்வாகி செல்லப்பாசரவணன், சசிகுமார், பாலமேடு வைரமணி, சந்திரசேகரன், சோழவந்தான் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai as the future