அலங்காநல்லூரில் இனிப்பு வழங்கி கொண்டாடிய காங்கிரஸார்
கர்நாடகாவில் ஆட்சியை காங்கிரஸ் பிடித்துள்ளதை அலங்காநல்லூரில் காங்கிரஸார்
கர்நாடகாவில் ஆட்சியை காங்கிரஸ் பிடித்துள்ளதை அலங்காநல்லூரில் காங்கிரஸார் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் சார் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டார காங்கிரஸ் சார்பில், மாவட்ட தலைவர் ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் வட்டார தலைவர்கள் சுப்பாராயலு, காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடிக்கும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும், தற்போது பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும் என, அவர்கள் தெரிவித்தனர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகுஇ காங்கிரஸ் அதிகமான வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது.அதை தொடர்ந்துஇ இன்று(மே 13) அந்த வாக்குகள் எண்ணப்பட்டன.224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களை கைப்பற்றினால் தனி பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில்இ காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது.காங்கிரஸை தொடர்ந்து, பாஜக 65 இடங்களிலும். மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu