மருத்துவ படிப்புக்காக அமெரிக்கா செல்லும் மாணவிக்கு பாராட்டு

மருத்துவ படிப்புக்காக  அமெரிக்கா செல்லும் மாணவிக்கு பாராட்டு
X

 சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் டாக்டர் பார்த்திபன், மாணவி திஷா விற்க்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார். 

அமெரிக்காவின் வெர்ஜின் டெக் ஸ்கூல் ஆப்மெடிசன் கல்லூரியில் டாக்டராக படிக்க நீட் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது

மதுரை மாவட்டம், பாலமேட்டில் பாரதிய ஜனத சார்பில், அமெரிக்காவில் வெர்ஜின் டெக் ஸ்கூல் ஆப் மெடிசன் கல்லூரியில் சேர்ந்து படிக்கவுள்ள பாலமேட்டை சேர்ந்த மாணவி திஷா தியாகராஜன்க்கு பாராட்டு விழா நடந்தது.
பாலமேடு பேருராட்சி முன்னாள் சேர்மன் கஜேந்திரன் தலைமையில் நடந்த விழாவில்,பாஜக ஒ பிசி அணி மாவட்டத்தலைவர் கண்ணன்கஜேந்திரன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக தொழிலதிபர் டாக்டர் பார்த்திபன், மாணவி திஷா விற்க்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும்_ இவ்விழாவில், மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மண்டலத் தலைவர் தங்கதுரை, கோவிந்தமூர்த்தி , கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் வெள்ளைச்சாமி, நாடார் கல்லூரி முன்னாள் முதல்வர் லட்சுமணன், ஜடி பிரிவு சாரன்ஜி விஜயபாண்டி, கொச பெருமாள், ராஜா, சங்கர் ,கணேசன், வர்த்தக பிரிவு செளந்திரபாண்டி, கிழக்கு மாவட்டத் தலைவர் முத்துராமன், மாநில பொதுக் குழு உறுப்பினர் தவமணி, மாணவியின் பெற்றோர் சர்மிளா தியாகரஜன் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story