சோழவந்தான் அருகே விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

சோழவந்தான் அருகே விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்
X

மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற  விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மருத்துவ முகாம்

சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மத்திய மாநில அரசுகளின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைபெற்றது‌.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் ஊராட்சி மன்ற சமுதாய கூடத்தில் மேலக்கால் ஊராட்சி மன்றம் மற்றும் திண்டுக்கல் சிட்டி மருத்துவமனை இணைந்து இலவச எலும்பு மூட்டு மாற்று மற்றும் முதுகு தண்டுவட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன் துவக்கி வைத்தார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாமி சித்தாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார். இதில் டாக்டர் கௌதம் தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை, மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை, குழந்தைகள் கால் வளைவு சிகிச்சை, நீண்ட நாள் எலும்பு சேராமல் இருப்பதற்கான சிகிச்சை உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

முகாமில் இலவச எம்ஆர்ஐ ஸ்கேன் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முகாமினை மக்கள் தொடர்பு அலுவலர்கள் இம்மானுவேல் ஜென்னர், ஆரோக்கிய பிரதிப் ஒருங்கிணைத்தனர். இதில் மேலக்கால் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்குபெற்று பயனடைந்தனர். இதில் மேலக்கால் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story