மதுரை அருகே இலவசமாக வீடு கட்டும் திட்டத்திற்காக நிதி உதவி வழங்கிய நிறுவனம்

மதுரை அருகே இலவசமாக வீடு கட்டும் திட்டத்திற்காக நிதி உதவி வழங்கிய நிறுவனம்
X

மதுரை  அருகே இலவச வீடு கட்டும் திட்டத்திற்காக நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மதுரை அருகே இலவசமாக வீடு கட்டும் திட்டத்திற்காக ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் நிதி உதவி வழங்கி உள்ளது.

வடுகப்பட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக பயனாளிகளுக்கு இலவசமாக வீடு கட்டுவதற்கான காசோலை வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், வடுகப்பட்டி ஊராட்சியில் ஜோய் ஆலுக்காஸ் பவுண்டேஷன் சார்பாக அந்த கிராமத்தை தத்தெடுத்து பயனளிகளுக்கு இலவசமாக வீடு கட்டித் தரும் நோக்கில் ஒரு பயனாளிக்கு 7 லட்சம் விகிதம் முதல் தவணையாக ரூ. 1.50 லட்சம் காசோலை ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் னேஜர் அஜோஜோனி, வழங்கினார். சிஎஸ்ஆர் எனப்படும் கார்பரேட் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் முன்னதாக சமயநல்லூர் காவல் துணைக் கண் காணிப்பாளர் ஆனந்தராஜ், குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் கலந்துகொண்டு வரவேற்புரையாற்றினார்.

தங்களது கிராமத்திற்கு வருகை தந்த ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் நிர்வாகி களையும் காவல் துறை அதிகாரிகளையும், கிராம மக்கள் மலர் தூவி வரவேற்றனர். முடிவில் கிராம செயலாளர் பங்கஜவல்லி, நன்றி கூறினார்.

Tags

Next Story