வாடிப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா: சீர்வரிசை பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.,

வாடிப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா: சீர்வரிசை பொருட்கள் வழங்கிய எம்.எல்.ஏ.,
X

வாடிப்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் சீர்வரிசை பொருட்களை எம்.எல்.ஏ., வெங்கடேசன் வழங்கினார்.

வாடிப்பட்டியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் சீர்வரிசை பொருட்களை எம்.எல்.ஏ., வழங்கினார்.

தமிழ்நாடு அரசுசமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கி ணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சார்பாக சமுதாய வளைகாப்பு விழா வாடிப்பட்டி பொன் பெருமாள் கோவில் சமுதாயக்கூடத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு வெங்க டேசன் எம்.எல்.ஏ., தாங்கினார். பேரூராட்சி தலைவர்கள் மு.பால் பாண்டியன், ஜெயராமன், முன்னா ள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ண வேணி,துனணத் தலைவர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தன ர். செயல் அலுவலர் ஜெயலட்சுமி வரவேற்றார்.

இந்த விழாவில் கர்ப்பிணி பெண்களுக்கு சந்தனம், குங்கும் பூசிய பின் ஜாக்கெட் துணி,வளையல்கள், மஞ்சள், குங்குமச்சிமிழ் உள்ளிட்டசீர்வரிசை பொருட்கள், எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய், தயிர் உள்பட பல வகை சாதங்கள் வழங்கப்பட்டன.

இதில் தி.மு.க.ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ், முரளி, வினோத், கவுன்சிலர்கள் ஐ.கே.குருநாதன், பூமிநாதன், நல்லம்மாள்,ஜெயகாந்தன், மீனா ஆறுமுகம், கார்த்திகராணி மோகன், சரசுராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!