திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் விளையாட்டு தின விழா

College Sports Day
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியில் வெள்ளிக்கிழமை அன்று 53-ஆம் ஆண்டு விளையாட்டு விழா மற்றும் விவேகானந்த மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் ஜி. சுரேஷ் கண்ணன், கல்லூரியின் பழைய மாணவர், ஏழுமலை சுரேஷ் டிம்பர்ஸ் இயக்குனர் முன்னிலையில் மாணவர்கள் அனைவரும் ஒலிம்பிக் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். விளையாட்டுப் போட்டிகளை சிறப்பு விருந்தினர் துவக்கி வைத்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் உயரம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 1500 மீட்டர் ஓட்டம் போன்றவற்றில் பங்கேற்றனர். ஆசிரியர்கள் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கயிறு இழுத்தல் போட்டியிலும், விருந்தினர்கள் மற்றும் பெற்றோர்கள் லக்கி கார்னர் போட்டியிலும் பங்கேற்றனர்.
College Sports Day
திருவேடகம் கல்லுாரி விளையாட்டு விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுடன் முதல்வர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் நிகழ்ச்சியானது, கல்லூரி பிரார்த்தனை, தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கல்லூரி வாழ்த்துப்பாடலுடன் இனிதே தொடங்கியது.
இறுதி ஆண்டு பொருளியல் துறை மாணவர் மற்றும் விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டி வரவேற்புரை நிகழ்த்தினார். விவேகானந்த கல்லூரி, உடற்கல்வி இயக்குநர் முனைவர் நிரேந்தன் மற்றும் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி, உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன் ஆகியோர் 2023-2024 ஆம் கல்வியாண்டின் விளையாட்டு ஆண்டு அறிக்கையைப் வாசித்தார்கள். விவேகானந்தா கல்லூரியின் முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார்.
திருச்சி, திருப்பராய்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம் தலைவர் சுவாமி சுத்தானந்த தலைமையில், ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் உபதலைவர், சுவாமி நியமானந்த மற்றும் திருப்புனவாசல் விவேகானந்த மேல்நிலைப்பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி அட்சரானந்த ஆசியுரை வழங்கினர். ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின் செயலர் ஸ்ரீமத் சுவாமி ஸத்யானந்த, ஸ்ரீமத் சுவாமி அபேதானந்த, விவேகானந்த மேனிலைப்பள்ளியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி பரமானந்த மற்றும் விவேகானந்த கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, விவேகானந்த கல்லூரியின் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
College Sports Day
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்க கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
துணை முதல்வர் கார்த்திகேயன், முதன்மையர் ஜெயசங்கர் மற்றும் அகத்தர மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு விவேகானந்தர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாதவன் ஆகியோர் விழாவை சிறப்பித்தனர்.
சிறப்பு விருந்தினர்
சுரேஷ் கண்ணன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாஸ்டர் யோகேஷ் விவேகானந்த மேல்நிலைப்பள்ளியின் பன்னிரெண்டாம் மாணவர் நன்றியுரை ஆற்றினார். கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் முருகன் , நிகழ்வினை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சி தேசியகீதத்துடன் நிறைவு பெற்றது. ஸ்ரீராமகிருஷ்ண தபோவன கிளை நிறுவன சுவாமிகள் , பெற்றோர்கள், தாய்மார்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தபோவனத்தைச் சார்ந்த பல்வேறு அன்பர்கள் இந்நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்றனர்..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu