திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்பொங்கல் விழா

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில்பொங்கல் விழா
X

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பொங்கல் விழா கலை நிகழ்ச்சி நடந்தது.

College Pongal Celebration மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

College Pongal Celebration

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர். இதன் தொடர்ச்சியாக, கல்லூரி மைதானத்தில் பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த, குலபதி ஶ்ரீமத் சுவாமி அத்யாத்மனந்த, முதல்வர் முனைவர் வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் முனைவர் ஜெயசங்கர், அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

College Pongal Celebration



கல்லூரி மாணவர்கள் குழுவாக மல்லர் கம்பம், கராத்தே, சிலம்பம், யோகா, தப்பாட்டம், தேவாரட்டம் ஆகிய விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி நிகழ்வுகளை உற்சாகத்துடன் செய்து காட்டினர். பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்ச்சியை, வரலாற்று துறை உதவி பேராசிரியர் முருகன் தொகுத்து வழங்கினார். கல்லூரியின் விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் நிரேந்தன், விவேகா நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருள்மாறன் மற்றும் விவேகானந்த குருகுல கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் சந்திரசேகரன், முனைவர் எல்லைராஜா இரகு, முனைவர் காமாட்சி, முனைவர் பிரேமானந்தம் ஆகியோர் மாணவர்களின் உடற்பயிற்சி திறமையை முன் நின்று ஒருங்கிணைத்தனர்.

Tags

Next Story