வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம்
X
வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 16 விவசாயிகளின் 35 ஆயிரத்து 178 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை விற்பனைக் குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று 16 விவசாயிகளின் 35 ஆயிரத்து 178 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், நடைபெற்ற இன்றைய ஏலத்தில் 16 விவசாயிகளின் 35178 தேங்காய்கள் 21 குவியலாக மதுரை விற்பனைக் குழுவின் செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமையில் ஏலம் விடப்பட்டது.

இன்று நடந்த ஏலத்தில் 11 வியாபாரிகள் பங்கு பெற்றனர். இன்று நடைபெற்ற ஏலத்தில், அதிகபட்சமாக விலையாக ரூ 11 க்கும் குறைந்த பட்சமாக ரூ 7.45க்கும் சராசரியாக ரூ 9.38 க்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. மேலும், ரூபாய் 3.30 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.

மேலும், 7 விவசாயின் 205.28 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில் 5, வியாபாரிகள் பங்கேற்று அதிகபட்சமாக 98.15 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 17532-க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்