வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம்

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் ஏலம்
X

கோப்பு படம் 

வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், ரூ.2.88 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது.

மதுரை விற்பனைக்குழுவின் வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், 11 விவசாயிகளின் 32 ஆயிரத்து 541 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. மதுரை விற்பனைக்குழுவின் கண்காணிப்பாளர் திருமுருகன் தலைமையில், இந்த ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் 18 வியாபாரிகள் பங்கு பெற்றனர்.

ஏலத்தில், அதிகபட்ச விலையாக ரூ.13.60க்கும் குறைந்தபட்சமாக ரூ. 7.01க்கும் சராசரியாக ரூ. 8.93 க்கும் ஏலம் போனது. மேலும் , ரூபாய் 2.88 இலட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடைபெற்றது. 3 விவசாயியின் 72 கிலோ கொப்பரை ஏலம் விடப்பட்டது. இதில், 3 வியாபாரிகள் பங்கேற்று, அதிகபட்சமாக 96.15 ரூபாய்க்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 4586, க்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!