சோழவந்தான் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..!

சோழவந்தான் அருகே மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்..!
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்  

இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

மக்களுடன் முதல்வர் முகாம்.

சோழவந்தான்.

சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை வெங்கடேசன் எம் எல் ஏ குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

சோழவந்தான் அருகே, இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில்,உள்ள ஏசியன் தனியார் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு, வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சமூக நலத்திட்ட தாசில்தார் பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாக முத்துப்பாண்டி, ரேகா வீரபாண்டி, ஊராட்சி மன்ற தலைவர்கள் இரும்பாடி ஈஸ்வரி பண்ணை செல்வம், கருப்பட்டி அம்பிகா, நாச்சிகுளம் சுகுமாரன், மன்னாடிமங்கலம்பவுன் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்ட வழங்கல் அலுவலர் ராஜ்குமார் வரவேற்புரை ஆற்றினார். முகாமை, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வாடிப்பட்டி ஒன்றிய ஆணையாளர்கள் பொற்செல்வி லட்சுமி காந்தம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். தொடர்ந்து முகமை, வெங்கடேசன் எம் .எல் .ஏ. பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் மு. பால்பாண்டி, துணைத் தலைவர் வழக்கறிஞர் கார்த்தி, வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன், இரும்பாடி பன்னைச்செல்வம்,திலீபன், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் நல்லதம்பி, வாடிப்பட்டி வினோத் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் நாச்சிகுளம் கார்த்தி கருப்பட்டி பழனி, இரும்பாடி முத்துப்பாண்டி, மன்னாடிமங்கலம் வெங்கடேசன், மேலக்கால் முத்துக்குமரன், ஊராட்சி செயலாளர்கள் கருப்பட்டி முனியாண்டி, மன்னாடிமங்கலம் திருச்செந்தில், நாச்சிகுளம் கதிரேசன் மற்றும் அரசின் பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் துணைத் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். ஊராட்சி செயலாளர் காசிலிங்கம் நன்றி கூறினார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!