Cinema Theatre Violence சோழவந்தான் அருகே சினிமா தியேட்டரில் ரகளை: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

தியேட்டரில் ரகளை செய்ததாக கைதுசெய்யப்பட்ட அசோக்குமார்
Cinema Theatre Violence
மதுரை சோழவந்தான் அருகே தியேட்டரில் ரகளையில் ஈடுபட்ட வாடிப்பட்டி
அதிமுக பேரூர் செயலாளர் கைது: வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்:
மதுரை மாவட்டம்,வாடிப்பட்டி அதிமுக நகரச் செயலாளர், பேரூராட்சி வார்டு கவுன்சிலர் அசோக்குமார் வயது (37) .
இவர், கடந்த 23ஆம் தேதி சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்கும் பொழுது அசோக்குமார் மற்றும் இவருடன் வந்த நபர்கள் குடிபோதையில் படம் பார்க்க வந்த மற்றவரிடம் தகராறு செய்துள்ளனர். உடனே, தியேட்டரில் வேலை செய்யும் சப்பாணி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். அசோக்குமார் மற்றும் அவருடன் வந்தவர்கள் சப்பாணியை சரமாரியாக தாக்கியதாகவும், தகாத வார்த்தையில் திட்டியதாகவும் சப்பானி காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சேகர், அசோக்குமார் உள்பட நான்கு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தார்.
இது குறித்து, தனிப்படை போலீசார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சேகர் உள்பட போலீசார் அசோக்குமார் மற்றும் மூன்று பேரை தேடிவந்தனர்.நேற்று இரவு அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர்.மற்ற மூன்று பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட அதிமுக பேரூர் செயலாளர் அசோக்குமார் வாடிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu