/* */

சோழவந்தானில் கோயில் தேரோட்டம்: போலீஸ் எஸ்.பி., எம்.எல்.ஏ. வடம் பிடித்தனர்

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

HIGHLIGHTS

சோழவந்தானில் கோயில் தேரோட்டம்: போலீஸ் எஸ்.பி., எம்.எல்.ஏ. வடம் பிடித்தனர்
X

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய தேரோட்டம் விமரிசையாக  நடைபெற்றது

சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் வைகாசி பெருந்திருவிழா 16ஆம் நாள் திருவிழா சோழவந்தான் காவல்துறை குடும்பத்தார்கள் நடத்தும் தேரோட்ட திருவிழா நடைபெற்றதது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த மே 22தேதி திருவிழா கொடியேற்றம் நடைபெற்று தினசரி வெவ்வேறு வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்து தினசரி கலை நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று 16ஆம் நாள் திருவிழா மற்றும் தேரோட்டம் திருவிழா நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை அம்மன் கேடயத்தில் அலங்காரமாகி கோவிலில் இருந்து புறப்பட்டு தேருக்கு வந்து சேர்ந்தது.அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார். வெங்கடேசன் எம்எல்ஏ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத், டிஎஸ்பி பாலசுந்தரம், தாசில்தார் மூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவபாலன், பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், ஜெனகை டிரஸ்ட் தலைவர் செல்வம், பேரூராட்சி செயல் அலுவலர் சகாய அந்தோணி யூசின் , கோவில் செயல் அலுவலர் இளமதி மற்றும் பக்தர்கள் ஆகியோர் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சோழவந்தான் பாட்டியமந்தார், கிராம காவல்காரர்கள் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுப்பதற்கு வெள்ளை வீசினார்கள். தேர் அங்கிருந்து புறப்பட்டு கடைவீதி,தெற்கு ரதவீதி, மேலரதவீதி,வடக்கு ரதவீதி, வழியாக தேர் வலம் வந்து புறப்பட்ட இடத்திற்கு தேர் வந்து சேர்ந்தது. தேர் வலம் வருவதற்கு ஆசாரியர்கள், தேர் சக்கரங்களை முறையாக குடில் கட்டை போட்டு வழிநடத்தி வந்தனர். வழி நெடுக அம்மனை வரவேற்று பூஜைகள் செய்தனர்.

சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன், முன்னாள் சேர்மன் எம். கே. முருகேசன், திரௌபதி அம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால், திமுக தொழில்நுட்ப அணி பார்த்திபன், வருவாய் ஆய்வாளர் சுப்புலட்சுமி, சுகாதாரபணி, ஆய்வாளர் முருகானந்தம், துணைத்தலைவர் லதாகண்ணன், பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் மருதுபாண்டியன், சத்யபிரகாஷ், குருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தேர் வரும் வழி நெடுக மாம்பழம், வாழைப்பழம், நாணயங்கள் சூறை விட்டனர். சிறுவர், சிறுமியர், கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வலம் வந்தனர். நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கினார்கள்.இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர் குபேந்திரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சார்பாக சுகாதாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. மின்சார வாரிய பணியாளர்கள் தேர் செல்லும் இடங்களில் மின் வயர்களை கழற்றி மீண்டும் இணைப்பு கொடுத்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு வட்ட பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் நண்பர்கள் சார்பாக 10வது ஆண்டாக அன்னதானம் வழங்கும் விழா நடந்தது.

இவ்விழாவில் சோழவந்தான் அரிமா சங்க தலைவர் டாக்டர் மருதுபாண்டியன் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.இரவு கோவிலின் முன்பாக உள்ள மேடையில் காவல்துறை பேண்டு வாத்திய இன்னிசை கச்சேரி மற்றும் வைகை மணி ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்ற்றது. சோழவந்தான் காவல் துறையை குடும்பத்தார்கள் சார்பாக தேரோட்ட திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காமாட்சிபுரம் சோழவந்தான் பூ வியாபாரிகள் சார்பாக தேர் முழுவதும் வண்ண பூக்களால் அலங்காரம் செய்திருந்தனர். நாளை இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் விடிய விடிய தீர்த்தவாரித் திருவிழா நடைபெற்றது..

Updated On: 6 Jun 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உறவுகளின் சந்தோஷத்தை அழிக்கும் மிக மோசமான ஆயுதம் சந்தேகம்!
  3. லைஃப்ஸ்டைல்
    ஏமாற்றாதே ஏமாற்றாதே... ஏமாறாதே ஏமாறாதே..!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘தாய்வழி உறவில் இன்னொரு தகப்பனாய் ஆதரவு தருபவரே தாய் மாமன்’
  5. நாமக்கல்
    குமாரபாளையம் ஜேகேகே நடராஜா கல்லூரியில் 15 ம் தேதி கல்லூரி கனவு...
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  7. வீடியோ
    😡DMK-வை விமர்சித்தா கஞ்சா வழக்கா ? SavukkuShankar விவகாரத்தில்...
  8. வீடியோ
    SavukkuShankar-க்கு X-Ray எடுக்க இரண்டு நாளாக போராடும் வழக்கறிஞர்...
  9. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!