சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய தேரோட்டம்: அமைச்சர் மூர்த்தி பங்கேற்பு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 14ஆம் தேதி பால்குடம் அக்னிச்சட்டி நிகழ்ச்சிகள் 15ஆம் தேதி பூக்குழி நிகழ்ச்சியும் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான , தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.
சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி. சிவ பிரசாத், சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் , சோழவந்தான் ஆய்வாளர் சிவபாலன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் ,பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன், துணைத்தலைவர் லதா கண்ணன் பணி நியமன குழு ஈஸ்வரி ஸ்டாலின், தொழிலதிபர் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருதுபாண்டியன், மணி முத்தையா, பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, பேரூர் செயலாளர் முனியாண்டி, நிர்வாகிகள் வழக்கறிஞர் சத்யபிரகாஷ், சோழவந்தான்
ஆர் .ஸ்டாலின், சிபிஆர் சரவணன், முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கேபிள் ராஜா, வழக்கறிஞர் முருகன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் ஐயப்பன், தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் பாலு, மாணவரணி எஸ் ஆர் சரவணன், முத்துக்குமரன், ராஜா என்ற இருளப்பன், வர்த்தக சங்கம் ஜவஹர், பிடிஆர் பாண்டியன், ஜவுளி நிறுவனர் பி. எஸ். மணி, கவுன்சிலர் சிவா, சங்கங்கோட்டை சந்திரன் மற்றும் சரவணன் நகர இளைஞரணி முட்டை கடை காளி மாவட்ட பிரதிநிதி சுரேஷ் தகவல் தொழில் நுட்ப அணி பார்த்திபன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தேர் ,பெரிய கடை வீதி, தெற்கு ரதவீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, உள்ளிட்ட நான்கு ரத வீதிகளில் வலம் வந்து தேர் நிலை கொண்டது. இதில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.மேலும், பக்தர்கள் சேத்தாளி வேஷம் பூண்டும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் தேருக்கு முன்பாக வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று தேரோட்டம் நடந்தது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை உண்டாக்கியது.தொடர்ந்து, திருவிழாவின் கடைசி திருவிழாவான அம்மன் ஊஞ்சல் ஆடும் தீர்த்தவாரி உற்சவம் நாளை நடைபெற உள்ளது . மதுரை மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில், சமயநல்லூர் டிஎஸ்பி தலைமையில் சோழவந்தான் போலீஸார்,சுமார் 200க்கும் மேற்பட்டடோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu