சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழித் திருவிழா கோலாகலம்: 5 ஆயிரம் பக்தர்கள் நேர்த்திக்கடன்..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் பூக்குழித் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.
Today Temple News in Tamil - மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகர்கள் சோழவந்தான் மந்தை களத்தில் உள்ள திடலில் பூக்குழி இறங்கினர் .
முன்னதாக, வைகை ஆற்றில் இருந்து சாமி ஊர்வலம் வந்து புறப்பட்டு, நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பூக்குழி இறங்கும் இடத்தை வந்தடைந்தது. முதலில் மரியாதை பம்பைக்காரர் பூக்குழி இறங்க பின்பு பக்தர்கள் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்திய பின்னர், பக்தர்கள் கோவிலுக்கு சென்று காப்புகளை கழற்றினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 21ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட காவல்துறை ஆலோசனையின் பேரில், சமயநல்லூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சோழவந்தான் ஆய்வாளர் சிவபாலன் மற்றும் காவலர்கள், சோழவந்தான் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் மணி முத்தையா, வள்ளி மயில், சோழவந்தான் அரிமா சங்கத் தலைவர் டாக்டர் மருது பாண்டியன், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சிவா, சோழவந்தான் ஸ்டாலின், செயல் அலுவலர் மற்றும் கோவில் பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள், வைகை ஆட்டோ ஓட்டுநர் உரிமையாளர் சங்கத்தினர், நகைக்கடை மற்றும் நகை அடகுக்கடை உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் சோழவந்தான் வர்த்தக சங்கத்தினர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் பூக்குழி திருவிழா தினத்தில் இரவு, சங்க கோட்டை கிராமத்தார் சார்பாக மந்தை களத்தில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu