cholavanthan temple kumbabhisheka function சோழவந்தானில், அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

cholavanthan temple kumbabhisheka function   சோழவந்தானில், அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்:ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
X

சோழவந்தான் பேட்டை வெள்ளை பிள்ளையார் கோயிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.

cholavanthan temple kumbabhisheka function மதுரை அருகே சோழவந்தானில் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. பக்த்கர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனின் அருள் பெற்றனர்.

cholavanthan temple kumbabhisheka function

தமிழகத்தினைப் பொறுத்தவரை உள்ளூர் கோயில் விசேஷம் என்றால் ஊர்கூடி ஒற்றுமையுடன் பணிகளைப் பிரித்து செய்வது வழக்கம். அது சாதாரண திருவிழாவாக இருந்தாலும் கும்பாபிஷேக விழாவாக இருந்தாலும் அதற்கான குழுவை நியமித்து அதற்கான வேலைகளையும் பிரித்து கொடுத்துவிடுவர். அந்த குழுவினர் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேலைகளைப் பொறுப்புடன் செய்வர். இதனால் எந்த பிரச்னையும்இல்லாமல் அந்த நிகழ்ச்சியானது நடந்தேறும். இதுதான் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் வழக்கம். அந்த வகையில் மதுரை அருகே உள்ள சோழவந்தான் கோயில் கும்பாபிஷேக விழாவும் நடந்தது.

மதுரை அருகே,சோழவந்தான் வெள்ளை பிள்ளையார், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது சோழவந்தான்,பேட்டை கிராமத்தில், உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, மேலூர் தெற்குதெரு மலை காசிராஜன் தலைமையில் மூன்று நாட்கள் யாக வேள்வி நடந்தது.

தொடர்ந்து, நான்காம் காலை யாக கேள்விகள் நடைபெற்று, கோபூஜை,நாடி சாந்தினம்,வேத பாராயணம்,பூர்ணாஹீதி நடந்தது.இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர்.

கருட ஜெபம் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.சிறப்புஅர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பச்சைவள்ளி காளியம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணசாமி பிரசாதம் வழங்கினார்.பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story
ai in future agriculture