/* */

சோழவந்தான் காவல் நிலையத்தில் பிரிவு உபச்சார விழா

பணி ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணியை பாராட்டி உயரதிகாரிகள் நினைவுப் பரிசு வழங்கினார்

HIGHLIGHTS

சோழவந்தான் காவல் நிலையத்தில் பிரிவு உபச்சார விழா
X

சோழவந்தான் காவல் நிலையத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு நடந்த பிரிவு உபசார  விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் காவல் நிலையத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற உதவி ஆய்வாளருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.

சோழவந்தான் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராஜேந்திரன் வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்றார். இதற்கான பிரிவு உபச்சார விழா காவல் நிலையத்தில் நடைபெற்றது. காவல் ஆய்வாளர் சிவபாலன் தலைமை வகித்தார். நிலைய எழுத்தர் விக்கிரம பாண்டி வரவேற்றார். சமயநல்லூர் துணைக் கண்காணிப்பாளர் பாலசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணி குறித்து பாராட்டிப் பேசி நினைவுப் பரிசு வழங்கினார். இதைத்தொடர்ந்து, காடுபட்டி சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பால்ராஜ், முத்தையா ஆகியோர் பேசினார்கள். தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Updated On: 28 Feb 2022 4:45 PM GMT

Related News