சோழவந்தான் நெல் கொள்முதல் நிலையம் 20 நாட்களாக மூடல்: விவசாயிகள் சாலை மறியல்
சோழவந்தான முக்கிய சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்குளி, நாராயணபுரம், தென்கரை, மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஊத்துக்குளி அரசு கொள்முதல் நிலையத்தில் அரசிடம் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 20 நாட்களாக நெல் கொள்முதல் நிலையம் மூடி கிடைப்பதால் ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த தங்களது நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் திணறி வருகின்றனர்.
அரசு அதிகாரிகள் முறையாக நெல் கொள்முதல் நிலையத்தை திறக்காமல் இழுத்தடித்ததால் கோபமடைந்த விவசாயிகள், சோழவந்தான முக்கிய சாலையில் விவசாயிகள் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சோழவந்தான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கு விவசாயிகள் சமரச பேச்சுவார்த்தைக்கு உடன்படாத நிலையில் போராட்டம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிப்புக்கு உள்ளானது.
நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னால் போராட்டம் கைவிடப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை போலீசார் மாவட்ட ஆட்சியரிடம் கூறி நெல் கிட்டங்கி அரசு அதிகாரிகளிடமும் சோழவந்தான் போலீசார் சேமிப்புக் கிடங்கை திறக்கும் முயற்சி எடுப்பதாக சோழவந்தான் போலீசார் வாக்குறுதி அளித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu