சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா 10000 பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபட்டனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னிச்சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் நடைபெற்று வருகிறது.
இதில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து சுமார் 10,000 மேற்பட்ட பக்தர்கள் இன்று அதிகாலை முதல் பால்குடம் அக்னி சட்டி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். இதற்காக சோழவந்தான் வைகை ஆற்றில் இருந்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பக்தர்கள் கரும்பு தொட்டில் கட்டியும் 21 அடி நீள அழகு குத்தியும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக குழந்தை வரம் வேண்டி நேர்த்திக்கடன் இருந்த தாய்மார்கள் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை தொட்டிலில் கிடத்தி நான்கு ரத வீதிகளில் வந்து நேர்த்திக்கடனை செலுத்தி செலுத்தினர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் சொந்த பந்தங்களுடன் குடும்ப குடும்பமாக திரண்டு வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது .
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் மற்றும் குடிநீர் உள்ளிட்டசுகாதாரப் பணிகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சங்கங்கோட்டை கிராமத்தை சேர்ந்த முத்து முருகா அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் சிவா, .தொண்டு நிறுவனமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையும் இணைந்து செய்துள்ளனர் இதனை தொடர்ந்து சுமார் 10,000 பேர் இறங்கும் பூக்குழி திருவிழா நாளையும் தேரோட்டம் நிகழ்ச்சி வருகின்ற ஆறாம் தேதியும் நடைபெறும் என்பதும் தமிழகத்திலேயே அதிக நாட்கள் அதாவது 17 நாட்கள் நடைபெறும் திருவிழா இது என்பது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu