சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில்  எம்.எல்.ஏ. ஆய்வு
X

சோழவந்தான் போக்குவரத்துக்கழக பணிமனை ஆய்வு செய்த எம்எல்ஏ வெங்கடேசன்

அரசு நடத்துனர்கள் பற்றாக்குறையை சரி செய்தால் அனைத்து கிராம பகுதிகளுக்கும் முழுநேர சேவையை சிறப்பாக செயல்படுத்த முடியும்

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

சோழவந்தான் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆய்வு செய்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்பொழுது, திரளாக கூடியிருந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை கோட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் நடத்துனர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. உதாரணமாக, சோழவந்தான் கிளையை எடுத்துக்கொண்டால், இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை 53 ஆகும். இந்த பேருந்துகளுக்கு ஓட்டுநர்கள் 150 பேர் உள்ளனர். இதே அளவுக்கு நடத்துனர்கள் இருக்கவேண்டும். ஆனால், தற்போது உள்ள நடத்துனர் களின் எண்ணிக்கை 119 மட்டும். ஓட்டுநர்களுக்கும், நடத்துனர்களுக்கும் உள்ள எண்ணிக்கை வித்தியாசம் 31 ஆகும். இதேபோல, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிளைகளிலும் இந்த வித்தியாசம் உள்ளது.

நகரப் பேருந்துகளில் காலை பணி பார்க்கின்ற நடத்துனர்கள் சுமார் இருபது பேர் கூடுதல் பணி, அதாவது ஓவர்டைம் பார்த்தால்தான் மாலை நேர பேருந்துகள் அனைத்தையும் இயக்க முடியும். அவ்வாறு கூடுதல் பணி பார்க்கின்ற நடத்துனர்கள் பேருந்துகளின் அனைத்து நடைகளையும் இயக்க முடியாது. முதல் அல்லது கடைசி நடையை கட் செய்துதான் இயக்க முடியும். எனவே மாலை இயக்கப்படுகின்ற பேருந்துகளில் சுமார் 15 முதல் 20 பேருந்துகள் அனைத்து நடைகளையும் ஓட்ட முடியாமல், போகிறது.

கிராம பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் சரிவர இயக்க முடியாமல் போவதற்கு நடத்துனர்கள் பற்றாக்குறைதான் முழு காரணம். தமிழக அரசு நடத்துனர்கள் பற்றாக்குறையை சரி செய்து, அனைத்து கிராம பகுதிகளுக்கும் முழுநேர பேருந்து சேவையை சிறப்பாக செயல்படுத்திட வேண்டும் என்று போக்குவரத்து தொழிலாளர்கள் வெங்கடேசன் எம்எல்ஏ இடம் கேட்டுக் கொண்டனர. முன்னதாக ,கிளை மேலாளர் முத்துராமன் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பாஸ்கர், அமிர்தராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

Tags

Next Story