சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா
X

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

சோழவந்தான் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா:

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் நாள்தோறும், பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வகையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் சுதர்சன் தலைமை தாங்கினார்.

சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் கல்யாணசுந்தரம் வரவேற்றார். பணியாளர்களுக்கு உபகரணங்களை பேரூராட்சி த்தலைவர் ஜெயராமன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், துணைத் தலைவர் லதா கண்ணன், பனிநியமண குழு ஈஸ்வரி ஸ்டாலின், வார்டு கவுன்சிலர்கள் முத்துச்செல்வி குருசாமி, வழக்கறிஞர் சத்யபிரகாஷ், செந்தில்வேல், சிவா. மற்றும் பணியாளர்கள் சோனை. துப்புரவு மேற்பார்வையாளர் வினோத், பூவலிங்கம் மற்றும் திமுகவைச் சேர்ந்த வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!