திரௌபதியம்மன் கோயில் பூக்குழி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் பூக்குழி திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம் நேற்று இரவு நடைபெற்றது.
திருவிழாவை முன்னிட்டு பிரசாந்த் சர்மா தலைமையில் பூஜைகள் நடந்தது பரம்பரை அரங்காவலர்கள் அர்ஜுனன், திருப்பதி, குப்புசாமி, செயல் அலுவலர் இளமதி, கோயில் ஆலோசகர் முன்னாள் சேர்மன் முருகேசன், வருட பொறுப்பாளர் பரம்பரை அறங்காவலர் ஜவஹர்லால் ஆகியோர் முன்னிலையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது.
முன்னதாக கொடி சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோயிலை வந்தடைந்தது. பின்னர் கோயிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் வைபவம் நடைபெற்றது. இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன், பேரூர் திமுக செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், கவுன்சிலர்கள் முத்துச்செல்வி மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர்.கலந்து கொண்டனர்
சோழவந்தான் திரௌபதிஅம்மன் கோவில் பூக்குழி திருவிழா ஏப். 24-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மகாபாரதக்கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் புரிந்து நிகழ்ச்சிகள் நடைபெறும்.
24-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை கொடியேற்றம் நடைபெற்றது. 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) மாலை சக்திகரகம், 26-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் திருக்கல்யாணம், மாலை அம்மனும் சுவாமியும் வீதிஉலா, 27-ந்தேதி (வியாழக்கிழமை) சர்க்கரையுககோட்டை சைத்தவன், துரோணாச்சாரி வேடம், 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருப்பட்டி கிராமத்தில் பீமன் வேடம், கீசகன் வதம் 29-ந்தேதி (சனிக்கிழமை) சோழவந்தானில் பீமன் வேடம், கீசகன் வதம், 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை அர்ஜுனன் வேடம், அம்மன் புறப்பாடு, அர்ஜுனன் தபசு நடக்கிறது.
மே 1-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 8 மணியளவில் காளிவேடம், அம்மன் புறப்பாடு, அரவான் பலி கொடுத்தல், கருப்பு சாமி வேடம் நடு இரவு காவல் கொடுத்தல், 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு திரௌபதை வேடம், துரியோதனன் படுகளம், அம்மன் புறப்பாடு, திரௌபதை சபதம் முடித்து கூந்தல் முடிப்பு, 3-ந்தேதி (புதன்கிழமை) மாலை மந்தைகளத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்குதல், அம்மன் புறப்பாடு நடைபெறும். 4-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை கொடி இறக்கம், வைகை ஆற்றில் தீர்த்தமாடுதல், இரவு கோவில் அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி, அதிகாலையில் அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி வந்து கோவிலை வந்தடையும். 5-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை பட்டாபிஷேகம், இரவு வீரவிருந்து நடைபெறுகிறது. தினமும் மகாபாரத தொடர் சொற்பொழிவு மற்றும் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu