சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் மிதித்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில்  மிதித்து  நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்
X

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற பூக்குழி விழா

சோழவந்தானில் 15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம், சோழவந்தான் துரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் ,15 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இக்கோவில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் திருவிழாவில் தொடர்ந்து , திருக்கல்யாணம்,கோட்டை கட்டுதல், கருப்பட்டி கிராமத்தில் கீசகன் வதம் மற்றும் பீமன் வேடம், அர்ச்சுனன் தபசு, அரவான் படுகளம், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக , மந்தைக் களத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். .பூக்குழி திருவிழா முடிந்த பின்பு திரௌபதியம்மன் சோழவந்தான் நகரின் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!