சோழவந்தான் ஐயப்பன் கோயில் ஆராட்டு விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்

சோழவந்தான் ஐயப்பன் கோயில் ஆராட்டு விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம்
X

சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் நடைபெற்ற ஆராட்டு விழா  ஊர்வலத்தில் பங்கேற்ற திரளான பக்தர்கள்

சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

சோழவந்தான் ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழாவையொட்டி நடைபெற்ற ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர். தொடர்ந்து, தினந்தோறும் மாலை ஐயப்பன் கோவிலில் பஜனை பாடல்களை பாடி தங்களது வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நடைபெற்ற ஆராட்டு விழாவில், வட்ட பிள்ளையார் கோவில் அருகே உள்ள வைகை ஆற்றில் ஐயப்பன் நீராடி சிறப்பு அலங்காரத்தில் கஜமுக வாகனத்துடன் ரயில்வே பீடர் ரோடு, மார்க்கெட் ரோடு, வழியாக செண்டை மேளம் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக வந்து திருக்கோவிலை அடைந்தபின்னர் ஆராட்டு விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர், ஐயப்பன் கோவிலில் அன்னதானம் நடைபெற்றது. சோழவந்தான் ஐயப்பன் கோவில் ஆராட்டு விழாவையொட்டி, அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் ராஜேந்திரன், திரவியம், ராமசாமி மற்றும் சோழவந்தான் பேரூர் கழகம் வாடிப்பட்டி ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள்: ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தின் முதல் நாளன்று சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தர்கள், மாலை அணிந்து விரதம் மேற்கொள்ள ஆரம்பிப்பார்கள். அப்படி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொள்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரத முறைகள் என்னென்ன என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும் வரை முடிவெட்டுதல், சவரம் செய்வதை தவிர்க்க வேண்டும்.மெத்தை, தலையணை உபயோகிக்காமல், தரையில் துணி விரித்துப் படுக்க வேண்டும். பேச்சைக் குறைத்து மவுனத்தை கடைப்பிடித்தல் வேண்டும். மற்றவர்களிடம் சாந்தமாக பழக வேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. விரத நாட்களில் பெண்களை சகோதரியாகவும் தாயாகவும் கருத வேண்டும். விரதகாலத்தில் பிரம்மச்சாரியத்தை கடுமையாக கடைபிடிக்கவும். மனதளவிலும் பெண்ணை நினைக்கக்கூடாது.

வீட்டிலிருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கானால் அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருக்க வேண்டும். அப்படி வசதி இல்லையென்றால் மாலை அணிந்தவர்கள் வேறு இடத்தில் தங்கியிருத்தல் நல்லது.அணிந்திருந்த மாலை அறுந்துபோனால் அதை செப்பனிட்டு அணிந்து கொள்ளலாம். இதில் தவறில்லை. மன சஞ்சலம் அடைய வேண்டாம்.

மாலை போடும் சமயத்தில் பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மன சஞ்சலம் இருந்தால் மாலை போடுவதை தள்ளிப் போடுதல் நல்லது. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் பக்தியும் மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும். இருமுடி கட்டும் வைபவத்தை தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும் என்பது ஐதீகம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!