சோழவந்தான் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் குடமுழுக்கு விழா
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழா
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விழாவைமுன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மாலை யாகசாலையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து, திங்கள் காலை மற்றும் மாலை யாகம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று புதன்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் யாகங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து ,ராஜா பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் தீர்த்த குடங்கள் சுமந்து சென்று கடம் புறப்பாடாகி காலை 6:45 மணிக்கு கும்பத்தின் மேல் புனிதநீர் ஊற்றப்பட்டது.
பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பச்சை நாயகி அம்மன், பூங்காவனத்தம்மை ,தைலம்மை ஸ்ரீ சாந்தம்மை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டு, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை, திருப்பணிக் குழுவினர் செய்தனர். அர்ச்சகர் கணபதி சுப்பிரமணியம், தீபாராதனை காட்டினார். கும்பாபிஷேக விழாவில், சோழவந்தான் பகுதியிலிருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu