சோழவந்தான், தென்கரையில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை மாவட்டம், சோழவந்தான், மற்றும் தென்கரை ஆகிய அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது.
மதுரை மாவட்டம், சோழவந்தான், மற்றும் தென்கரை ஆகிய அய்யப்பன் கோவிலில் ஆராட்டு திருவிழா நடந்தது.
இங்கு வருடந்தோறும், ஆராட்டு விழா சிறப்பாக நடைபெறும். இதேபோல், இந்த ஆண்டு நேற்று அதிகாலை தென்கரை அய்யப்பன் கோவிலில் கண்ணன் பட்ட மற்றும் பிரசாந்த் சர்மா தலைமையில் யாகபூஜை நடத்தினர். இதைத் தொடர்ந்து, யானை மீது அய்யப்பசுவாமி அலங்கரித்து அய்யப்பபக்தர்கள் பக்திபாடல்கள் பாடி ஆடி வந்தனர். ஏற்பாடு செய்யப்பட்ட மேடையில் அய்யப்பசுவாமிக்கு பால், தயிர் உட்பட 21 அபிஷேகங்கள் நடைபெற்று, நெய் அபிஷேகமும், புனிதநீரால் மகாஅபிஷேகமும் நடைபெற்றது. வைகை ஆற்றில் உள்ள தண்ணீரில் அய்யப்பசுவாமி ஆராட்டுவிழா நடந்தது.
அங்கிருந்து அய்யப்ப பக்தர்கள் சரணகோஷம் போட்டனர். பின்னர், கரையிலுள்ள மண்டகப்படிக்கு அய்யப்ப சுவாமி எழுந்தருளி அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. மீண்டும் யானை மீது அய்யப்ப சுவாமி வலம் வந்து கோவிலை அடைந்தது. இங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் தென்கரை,
முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, குருவிதுறை, காடுபட்டி, விக்கிரமங்கலம், ஊத்துக்குளி, சோழவந்தான் ஆகியஊரில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். தென்கரை அய்யப்பன் கோவில் பக்தர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல், சோழவந்தான் அய்யப்பன் கோவிலில் சண்முகவேல் அர்ச்சகர் தலைமையில் யாகபூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து, அங்கிருந்து அய்யப்பன் யானை மீது அமர்ந்து கோவிலிலிருந்து மாரியம்மன் சன்னதி, கடைவீதி, தெற்குரதவீதி, மேலரதவீதி வழியாக வைகை ஆற்றுக்கு சென்று அங்கு அய்யப்பனுக்கு பால்,தயிர் உள்பட 12 அபிஷேகம் மற்றும் நெய்யபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, புனிதநீரால் மகாஅபிஷேகம் நடந்தது.
பின்னர், வைகையாற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. அய்யப்பன் அலங்கரிக்கப்பட்டு யானை மீது அமர்ந்து பக்தர்கள் பக்தி பஜனை பாடல்கள் பாடி, ஆடி வந்தனர்.கோவிலில் வந்து அடைந்ததும் அங்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu