சோழவந்தான் விசாக நட்சத்திர பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் வழிபாடு

சோழவந்தான் விசாக நட்சத்திர பிரதோஷ விழா: திரளான பக்தர்கள் வழிபாடு
X

பைல் படம்

சோழவந்தான் அருள்மிகு பிரளய நாத சிவாலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

சோழவந்தான் அருள்மிகு பிரளய நாதர் சிவாலயத்தில் புரட்டாசி மாத பிரதோஷம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு பிரளயயநாத சிவாலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷம் நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால், தயிர், வெண்ணெய், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிவபெருமான் அம்பாளுடன் பிரியாவிடை ரிஷப வாகனத்தில் திருக்கோவிலை சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.

பக்தர்கள் ஓம் நமச்சிவாயா என்று பாடி பின் தொடர்ந்தனர். தீப ஆராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை எம்விஎம். குழும தலைவர் மணி முத்தையா, கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் தாளாளர், சோழவந்தான் நகர அரிமா சங்கத் தலைவர் தொழிலதிபர் டாக்டர்.எம் மருது பாண்டியன், எம் வி எம் கலைவாணி பள்ளி நிர்வாகி எம் வள்ளி மயில் ஆகியோர் செய்து இருந்தனர். இதே போல திருவேடகம் ஏடகநாதர் ஏலவார் குழலி அம்மன் ஆலயத்திலும், பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் ஆலயம் உட்பட சோழவந்தான் பகுதி சிவாலயங்களில் பிரதோஷம் நடைபெற்றது.

Tags

Next Story
அட இது தெரியமா போச்சே !!ஆரஞ்சு பழம் , கடல் உணவுல தைராய்டு பிரச்சனைய சரி பண்ணிரலாமா !!! | Superfoods that will help in managing thyroid levels in tamil