/* */

சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேனம்மாள் திருவிழா..!

சோழவந்தான் அருகே 400 ஆண்டு பழமை வாய்ந்த ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் 112 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேனம்மாள் திருவிழா..!
X

சோழவந்தான் ஜெர்மேனம்மாள் திருவிழா.

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் அருகே ராயபுரம் கிராமத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகளுக்கும் மேலாக அழியாத உடல் பலம் பெற்ற புனிதஜெர்மேனம்மாள் 112 ஆம் ஆண்டு திருவிழா ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதைத்தொடர்ந்து திருப்பலி மறையுரை நடைபெற்றது.இதிலிருந்து தினசரி கொடி பவனி,ஜெபமாலை,திருப்பலி நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை இரவு திருவிழாதிருப்பலி,தேர் பவனி,நற்கருணை ஆசீர் நடைபெற்றது. மதுரை கரூர் திண்டுக்கல் தேனி விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.ராயபுரம் திருவிழா இரவு முழுவதும் விழாக்கோலமாக காட்சி அளித்தது.

இன்று ஞாயிறு புதுநன்மை விழா,தேர் பவனி ,நாளை திங்கட்கிழமை காலை நன்றி திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகளை புனித ஜெர்மேனம்மாள் ஆலயம் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். சமயநல்லூர் டிஎஸ்பி ஆனந்தராஜ், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

சோழவந்தான்,வாடிப்பட்டி, மதுரை உட்பட பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தனர். சுகாதாரம்,குடிநீர் வசதிகளை ரிஷபம் ஊராட்சி மன்ற தலைவர் சிறுமணி மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Updated On: 14 April 2024 8:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது