சோழவந்தான் பகுதி வாக்குச்சாவடி திமுக முகவர் கூட்டம்..!

சோழவந்தான் பகுதி வாக்குச்சாவடி திமுக  முகவர் கூட்டம்..!
X

அலங்காநல்லூரில், திமுக சார்பில் நடந்த வாக்குச்சாவடி கூட்டம்.

மதுரை, சோழவந்தான் பகுதி வாக்குச்சாவடிக்கான திமுக முகவர் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் தனியார் மண்டபத்தில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, கலந்து கொண்டு முகவர்கள் முன்னிலையில் பேசினார். வடக்கு மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், பால ராஜேந்திரன், பசும்பொன்மாறன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர் செயலாளர்கள் மனோகரவேல் பாண்டியன், ரகுபதி, பேரூர் அவைத் தலைவர்கள் நடராஜன், குரு தங்கம், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், பால்பாண்டியன், துணை தலைவர்கள் சுவாமிநாதன், வழக்கறிஞர் கார்த்திக், மாவட்ட நிர்வாகி சோமசுந்தர பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர்கள் அருண்குமார், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் பிரதாப், இளைஞரணி அமைப்பாளர்கள் சந்தனகருப்பு, தனிச்சியம் மருது, மாணவரணி அமைப்பாளர் யோகேஷ், தகவல் தொழில் நுட்ப அணி தவ சதிஷ், பொறியாளர் அணி ராகுல், ஊராட்சி மன்ற தலைவர்கள் பாக்கியலட்சுமி மகேந்திரன், முத்துராமன், ஒன்றிய கவுன்சிலர்கள் தண்டலை சரவணன், ராஜா, மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில், கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா