அலங்காநல்லூர் அருகே மக்களுடன் முதல்வர் முகாம்..!

அலங்காநல்லூர் அருகே மக்களுடன் முதல்வர் முகாம்..!
X

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது.

அலங்காநல்லூர் :

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கொண்டையம்பட்டி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ் பரந்தாமன், வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, திமுக மாவட்ட அவை தலைவர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். ஒன்றிய குழு தலைவர்

பஞ்சுஅழகு, முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி வரவேற்றார். இந்த முகாமில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை உள்ளிட்ட 13 துறைகளை சேர்ந்த அதிகாரிகளின் பல்வேறு சேவைகள் குறித்து தனித்தயாக அரங்கு அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டது.

இதில் சின்னஇலந்தைகுளம், அழகாபுரி அய்யங்கோட்டை, கொண்டையம்பட்டி, உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளை சேர்ந்த சுற்று வட்டார பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன், அலங்கை பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன் ஒன்றிய துணை செயலாளர் அருண்குமார், ராதாகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர் அய்யங்கோட்டை விஜயகுமார் ,முன்னாள் பேருர் துணைச் செயலாளர் கண்ணன், சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தண்டலை தவசதீஷ், யூனியன் ஆணையாளர்கள் வள்ளி, கலைச்செல்வி வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், சமூக நலத்திட்ட தாசில்தார் பார்த்திபன், மின்வாரிய பொறியாளர் பரமேஸ்வரன், உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மகளிர் சுய உதவி குழு கடன், தனிநபர் கடன் காசோலையை வழங்கப்பட்டது. தொடர்ந்து பயனாளிகளுக்கு தோட்டக்கலை துறை சார்பில் தென்னங் கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது