வாடிப்பட்டியில் சட்டப் பஞ்சாயத்து இயக்க முகாம்
வாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற சட்ட பயிற்சி முகாம்
வாடிப்பட்டியில் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பாக சட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் சட்ட பயிற்சிமுகாம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் அருள் முருகானந்தம், மாநில அமைப்பு செயலாளர் கங்காதுரை, மாவட்டச் செயலாளர் நாகமுத்து ராஜா விழிப்புணர்வு ஆலோசனை வழங்கினர்.
இதில் காவல் துறை நடைமுறைகள், நீதிமன்ற நடைமுறைகள், அடிப்படை சட்டங்கள்குறித்த ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான சட்ட பஞ்சாயத்து இயக்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் நோக்கம்..
அரசு நிர்வாகம்: இலஞ்ச-ஊழல் இல்லாமலும் - இருப்பதே தெரியாமலும் இயங்கும் விரைவான, வெளிப்படையான, மக்கள் சேவகனாக இருக்கும் அரசு நிர்வாகத்தை உறுதிப்படுத்துதல். குடிமக்கள் விழிப்புணர்வு: ஓட்டுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள், கடமைகள், சட்டங்கள் பற்றிய புரிதலை விதைத்து அனைத்து குடிமக்களிடம் ஜனநாயகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல். அனைவருக்கும் வளர்ச்சி: கல்வி, மருத்துவம், விவசாயம், தொழில், அடிப்படைக் கட்டமைப்புகள், சட்டம்-ஒழுங்கு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவமளித்து வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் கொள்கைகளை முன்வைத்தல். இந்த மாபெரும் இலட்சியங்களை நோக்கிய பயணமே "சட்ட பஞ்சாயத்து இயக்கம்".
ஒருவரியில் சொல்வதென்றால் "சட்டத்தின் ஆட்சி", "அனைவருக்கும் வளர்ச்சி" தரும் "நல்லாட்சியை" மலரச் செய்வதற்கான மக்கள் இயக்கமே சட்ட பஞ்சாயத்து இயக்கமாகும். டிசம்பர் 14, 2013 அன்று, சென்னையில் .ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் .அவர்களால் சட்ட பஞ்சாயத்து இயக்கமும், இயக்கத்தின் தொலைபேசி சேவை மையமும் துவங்கி வைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu