ஜாதிவாரி கணக்கு எடுப்பு: பூர்வீக மக்கள் விடுதலை கட்சி வலியுறுத்தல்
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை தாமதமின்றி நடத்த வேண்டுமென பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகில் பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு, மதுரை மாவட்ட செயலாளர் தங்கமணி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர்கள் முருகேசன், அனல் முருகன், மணிகண்டன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் குமார் வரவேற்றார். இந்தக்கூட்டத்தில், பூர்வீக மக்கள் விடுதலைக் கட்சி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார்.
இதில் , மாவட்டச் செயலாளர்கள் தென்காசி சுப்பிரமணியன், விருதுநகர் இன்பராஜ், திருப்பூர் கருப்புசாமி, ராமநாதபுரம் கோபி, கோயம்புத்தூர் சுப்பிரமணி, ஆதிவாசிகள் உரிமைக்கான செயல்பாட்டாளர் தன்ராஜ், ஐடியல் மைய ஒருங்கி ணைப்பாளர் முனியாண்டி, அம்பேத்கார் தேசிய இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியபாண்டியன், கம்யூனிஸ்ட் ரெட்ஸ்டார் மாநில குழு உறுப்பினர் ஸ்ரீதர், விடுதலை சிறுத்தைகள் வடக்கு மாவட்ட அமைப்பாளர் கணபதி, சமூக ஆர்வலர்கள் பரமன் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், புதிரை வண்ணார் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
2011க்கு பின் பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் சாதிவாரி கணக் கெடுப்பை 2023 - ஆம் ஆண்டிலாவது தாமதமின்ற நடத்த வேண்டும் என்றும், வாடிப்பட்டி வழித்தடத்தில் செல்லும் அனைத்து விரைவு பேருந்துகளும் இரவு பகல் பார்க்காமல் பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும் என்றும், இருபோக சாகுபடி நிலங்கள் உள்ள பேரனை முதல் கள்ளந்திரி வரை செல்லும் பெரியாறு பாசன கால்வாயை தண்ணீர் திறப்பதற்குள் சீரமைத்து மராமத்து பணி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில்,தேனி மாவட்டச் செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu