திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கருத்தரங்கம்..!

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் கருத்தரங்கம்..!
X

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி கணிதத்துறையின் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி கணிதத்துறையின் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

மதுரை திருவேடகம் விவேகானந்த கல்லூரி கணிதத்துறையின் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் கருத்தரங்கம் நடந்தது.

மதுரை அருகே,திருவேடகம் விவேகானந்த கல்லூரியின் கணிதத்துறை சார்பாக , வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கணிதத்துறையின் பொறுப்பு தலைவர் முனைவர் சி.ராஜன் வரவேற்புரையும், கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரை வழங்கினர். கல்லூரியின் முதல்வர் தி. வெங்கடேசன் தலைமையுரை வழங்கினார்.

இந்நிகழ்விற்குச் சிறப்பு விருந்தினராக நிலக்கோட்டை கணித மன்ற இயக்குனர் காசிமாயன் மற்றும் பேராசிரியர் மஹேந்திர பாண்டியன் மற்றும் தன்னார்வலர்கள் சந்துருபாண்டி மற்றும் இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு, வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தினர்.

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பித்தனர் . இந்நிகழ்விற்குக் கணிதத்துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் எம்.நாகராஜ் நன்றியுரை நவின்றார். இந்நிகழ்வை உதவிப்பேராசிரியர் முனைவர் சி.வேல்முருகன் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியை முனைவர் ஆர். கலைவாணன் மற்றும் முனைவர் சி. செல்லப்பாண்டியன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!