மதுரை வாடிப்பட்டி அருகே தென்னந்தோப்பில் கார் டிரைவர் வெட்டிக்கொலை

மதுரை வாடிப்பட்டி  அருகே தென்னந்தோப்பில் கார் டிரைவர் வெட்டிக்கொலை
X

மதுரை வாடிப்பட்டி அருகே கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் மருதுபாண்டி.

மதுரை வாடிப்பட்டி அருகே தென்னந்தோப்பில் கார் டிரைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை வாடிப்பட்டி அருகே சோழவந்தான் பூ மேட்டு தெருவை சேர்ந்த கார் டிரைவர் மருதுபாண்டி என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது பற்றி வாடிப்பட்டி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை பழனிஆண்டவர் கோவில் சாலையில் மலையடிவாரத்தில் மினரல் வாட்டர் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் தொடர்ந்து 5 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில், சோழவந்தான் பூமேட்டுதெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ் (வயது 30.) பொறுப்பாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சதீஷ் பழனி பாதயாத்திரை செல்ல முடிவு செய்து இதற்காக தனது அண்ணனான கார் டிரைவர் மருது பாண்டி என்பவரை தனக்கு பதிலாக தென்னந்தோப்பில் இருக்கச் சொல்லிவிட்டு பாதயாத்திரை புறப்பட்டார்

மருது பாண்டியுடன் மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுவனும் தோட்ட வேலை பார்ப்பதற்காக இங்கு தங்கி இருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை பாதயாத்திரை செல்வதற்கு முன் தனது அண்ணனிடம் தகவல் சொல்லிவிட்டு செல்ல சதீஷ் தென்னந்தோப்பிற்கு வந்துள்ளார்.

அப்போது மருதுபாண்டி முகம் வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் அடிப்படையில், வாடிப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் டிரைவர் மருதுபாண்டியுடன் இருந்த 17வயது சிறுன் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். இந்த சம்பவத்தால் வாடிப்பட்டி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி உடனடியாக எதுவும் தெரியவில்லை.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!