மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மதுரை அருகே அலங்காநல்லூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
X

அலங்காநல்லூரில், அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், பேசுகிறார் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்

அலங்காநல்லூரில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், கேட்டுகடையில் அதிமுக சார்பில் 2024 பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், கருப்பையா, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், மகளிரணி மாவட்ட செயலாளர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை வழங்கினார்.

கல்லுபட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆர்யா, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிங்கராஜ பாண்டியன், இணை செயலாளர் தண்டலை ஆனந்த், அவை தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய துணை செயலாளர் சம்பத்,

எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெயச்சந்திரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ரேவதி, பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர்கள் மயில்வீரன், திருநாவுக்கரசு, நிர்வாகிகள் எம்.எஸ்.சுந்தரம், வழக்கறிஞர் ராஜ்குமார், பாஸ்கரன், கேட்டுகடை ஆறுமுகம், செவக்காடு கருப்பு, மகளிரணி லதா, புளியம்மாள், மாவட்ட பிரதிநிதி முரளி, கோட்டைமேடு பாலன், புதுப்பட்டி தாமரை, பெரியஊர்சேரி செந்தில், விவசாய அணி காமாட்சி, மனோகரன், கிளை செயலாளர்கள் தனுஷ்கோடி, குடடிமேக்கிபட்டி சோனை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!