சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் ஆண் சடலம். கொலையா?

சோழவந்தான் அருகே கிணற்றுக்குள் ஆண் சடலம்.  கொலையா?
X

கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கோட்டைசாமி

சோழவந்தான் அருகேகரட்டுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண் சடலம் கண்டெடுப்பு. கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

சோழவந்தான் அருகே கரட்டு்பட்டியை சேர்ந்தவர் சுந்தரபாண்டி மகன் கோட்டைசாமி 22. இவர்மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக கோட்டைசாமியை காணாவில்லை. பெற்றோர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிவந்த நிலையில் , இன்று கரட்டுபட்டியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் ஆண்பிணம் மிதப்பதாக சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், சமயநல்லூர் துணைகண்காணிப்பாளர் பாலசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவபாலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த உடலை நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் மீட்டு விசாரணை செய்தனர்.

இடுப்பில் கயிற்றுடன் மிதந்த உடலில், கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது கோட்டைசாமி என்று போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து, சம்பவ இடத்திற்கு மாவட்டகாவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சென்று பார்வையிட்டு கொலையாளிகளை பிடிக்க தனிபடை அமைத்து உத்திரவிட்டார்.

ரவுகளுக்கு ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா?.அல்லது பழிக்கு பழியாக நடந்த கொலையா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!