மதுரை அருகே பரவையில் பாஜக சார்பில் பொங்கல் விழா: அண்ணாமலை பங்கேற்பு

மதுரை அருகே பரவையில் பாஜக சார்பில் பொங்கல் விழா: அண்ணாமலை பங்கேற்பு
X

மதுரை பரவையில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

பரவை முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது

மதுரை பரவையில் நடைபெற்ற நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், தைப்பொங்கல் தமிழர் திருவிழாவை முன்னிட்டு, பரவை முத்து நாயகி அம்மன் கோவில் வளாகத்தில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது .

மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார் .மாநிலத்தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார்.

அவருக்கு மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் , மேளதாளங்களுடன் கும்ப மரியாதை அளிக்கப்பட்டது . விழாவில், 108 பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்தனர். அதனைத் தொடர்ந்து ,108 பசுக்களுக்கு கோபூஜை விழா நடைபெற்றது. மேலும், விழாவில் பரதநாட்டியம் ,சிலம்பாட்டம் , கரகாட்டம் ,கிராமிய பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது .

விழாவில் ,மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் ,மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெயவேல், குமார் ,மாவட்ட பொதுச் செயலாளர்கள் துரை பாலமுருகன், வினோத்குமார் , பொருளாளர் ராஜ்குமார், மகளிர் அணி தலைவர் ஓம் சக்தி தனலட்சுமி, இளைஞரணி தலைவர் பாரி ஜெயவேல் ,பரவை மண்டல் நிர்வாகிகள் ரமேஷ் கண்ணன், ஜெகநாதன், விவசாய அணி தலைவர் துரைபாஸ்கர் உள்பட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai in future agriculture