திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பாவை கருத்தரங்கம்!

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பாவை கருத்தரங்கம்!
X

திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில்,  நடைபெற்ற பாவை கருத்தரங்கம்.

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், பாவை கருத்தரங்கம் நடைபெற்றது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறையின் ‘பாவை அரங்கம்':

மதுரை:

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, திருவேடகம், விவேகானந்த கல்லூரியில், தமிழ்த்துறையின் ‘பாவை அரங்கம்' சார்பாக (28.12.2023) வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு, கல்லூரியின் இறைவழிபாட்டுக் கூடத்தில் ‘திருவெம்பாவை மற்றும் திருப்பாவை’ என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையும், கல்லூரி செயலர் ஸ்ரீமத் சுவாமி வேதானந்த மற்றும் குலபதி ஸ்ரீமத் சுவாமி அத்யாத்மானந்த ஆசியுரையும் வழங்கினர். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திரு ம.கண்ணன் (உதவிப்பேராசிரியர், மதுரைக்கல்லூரி, மதுரை) ‘திருப்பாவை’ என்ற தலைப்பிலும், முனைவர் சீ.விமல் (தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர், மதுரைக்கல்லூரி (சுயநிதிப்பிரிவு), மதுரை.) ‘திருவெம்பாவை’ என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்விற்கு முனைவர் வ.க.ராமகிருஷ்ணன் (இணைப்பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்) வரவேற்புரையும், முனைவர் கு.இராமர் நன்றியுரையும் வழங்கினர். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரெ.சுதாகர்வடிவேலு (உதவிப்பேராசிரியர்) இந்நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை, திருவேடகம் விவேகானந்த கல்லூரி நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

Tags

Next Story
ஆசிரியர்களுக்கு உதவியாக மொபைல் செயலி: வேலை சுமையை குறைக்க புதிய முயற்சி..!