திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம்

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது.

திருவேடகம் விவேகானந்த கல்லூரியில் பாரதியார் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம் நடந்தது.

திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் சுவாமி விவேகானந்த படிப்பக மையம் மற்றும் பாரதி சிந்தனை அரங்கம் இணைந்து நடத்தும் “சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்“ 11.09.2024 புதன்கிழமை அன்று காலை 10:30 மணி அளவில் கல்லூரியின் இறைவழிபாட்டுக் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்குத் தமிழ்த்துறைத் தலைவர் (பொ) முனைவர் கு.இராமர் (பாரதி சிந்தனை அரங்க ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தி.வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர் ஆசியுரை வழங்கினர். செல்வன் ப.கௌசிகன் (மூன்றாமாண்டு இளங்கலை வணிகவியல் கணினிப்பயன்பாடு) ஆங்கிலத்திலும், செல்வன் சோ.தரணி (இரண்டாமாண்டு இளங்கலை வணிகவியல்) தமிழிலும் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையை நிகழ்த்தினர்.

‘வீரத் துறவியும்… விவேகக் கவிஞரும்…' என்ற தலைப்பில் முனைவர் பெ.முருகன் (தமிழ்த்துறைத் தலைவர், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம்) சிறப்புரை வழங்கினார். வரலாற்றுத் துறை உதவிப்பேராசிரியர் திரு.வீ.முருகன் (சுவாமி விவேகானந்த படிப்பக மைய ஒருங்கிணைப்பாளர்) நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முனைவர் கோ.பாலமுருகன் (உதவிபாப்பேராசிரியர், தமிழ்த்துறை) தொகுத்து வழங்கினார்.

Next Story