மதுரை அருகே பாரதிய மஸ்தூர் சங்க பொதுக் கூட்டம்
அலங்காநல்லூர் அருகே நடைபெற்ற பாரதிய மஸ்தூர் சங்க பொதுக்கூட்டத்தில் பேசுகிறார் ,பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில், பாரதிய மஸ்தூர் சங்கம் மற்றும் அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது .
இந்த பொதுக்கூட்டத்திற்கு, பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.கட்டுமான சங்க ஒன்றியத்தலைவர் ரவிக்குமார், பொதுச் செயலாளர் கடவூர் கார்த்திக்செயல், தலைவர் திருமலை கண்ணன்,பேராசிரியர் பெருமாள், ராஜாமணி, தமிழ்நாடு வணிகர் சங்க மாநிலத் துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீமான் தங்கராஜ் ,துணைத் தலைவர் பாலு, மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் மகா சுசீந்திரன், விவசாய அணி மாநில துணைத்தலைவர் சோழவந்தான் மணிமுத்தையா,மக்கள் சேவை பிரிவு சுப்பிரமணியன், செல்வ அருண்குமார், சௌந்தர பாண்டியன், ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், குடியிருப்பு இல்லாத கட்டிட தொழிலாளர்களுக்கு அரசு ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஐந்து சதவீதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க தமிழ்நாடு அரசே கேட்டுக் கொள்கிறோம்.
நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ பிடித்தம் செய்து மருத்துவ வசதி வழங்குவது போல் நலவாரிய ஆண்டுசந்தாவுடன் குறிப்பிட்ட தொகையை புடித்தம் செய்து கட்டுமான உறுப்பினர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து தர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில்வலியுறுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மணிகண்டன் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu