சோழவந்தான் அருகே நகரி தனியார் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது..!

சோழவந்தான் அருகே நகரி தனியார் பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது..!
X

சோழவந்தான்  நகரி பள்ளி 

சோழவந்தான் அருகே உள்ள நகரி கல்வி தனியார் பள்ளி 2024 ன் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருதைப் பெற்றுள்ளது.

சோழவந்தான் அருகே உள்ள நகரி கல்வி தனியார் பள்ளி 2024 ன் பொதுமக்கள் வாக்குப்பதிவு மற்றும் சமூக விருப்ப விருதைப் பெற்றுள்ளது.

சோழவந்தான்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ,நகரில் அமைந்துள்ள கல்வி சர்வதேச பள்ளி ஆனது உலகின் சிறந்த பள்ளிகள் பட்டியலில் இடம்பெற்ற 50 பள்ளிகளில் அதிக மக்கள் வாக்குகளைப் பெற்று, சமூக விருப்ப விருதை வென்றுள்ளது.

இதன் மூலம், பள்ளிக்கு சிறந்த பணியிடமாகத் திகழ, ஆசிரியர் நலனை மேம்படுத்துவதற்கும், சிறந்த கல்வியாளர்களை ஈர்க்கவும், வேலை நிலைகளை மேம்படுத்தவும் உதவும் T4 எஜுகேஷனின் “Best School to Work” உறுப்பினர் பதவியும் கிடைத்துள்ளதாகவும், விருது பெற்றது குறித்து ,T4 எஜுகேஷன் மற்றும் உலகின் சிறந்த பள்ளி விருதுகளின் நிறுவனர் விகாஸ் போட்டா கூறும்போது:

“உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களையும் மனங்களையும் கவர்ந்ததற்காககல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் பள்ளிக்கு மனமார்ந்தவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், உலகின் சிறந்த பள்ளி பரிசு 2024ன் சமூக விருப்ப விருதைப் பெறுவதற்கு மிகவும் தகுதியானவர்கள். என்றும் கூறியதோடு,கல்வி சர்வதேச பள்ளியின் சாதனைகளை அரசாங்கங்கள் பாராட்டி, நமது சமுதாயங்கள் எதிர்கொள்கிற சவால்களை எதிர்கொள்ளும் பள்ளிகளின் மகத்தான முனைப்பை கற்றுக்கொள்வார்கள் என தான் நம்புவதாகவும், உங்களின் முயற்சிகள் ஒரு நல்ல எதிர்காலத்துக்கு வழிகாட்டுகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து, கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல் பற்றி: கல்வி குழுமத் தலைவர் செந்தில் கூறுகையில்:

மதுரையில் அமைந்துள்ள கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல், 2018-ல் துவங்கியதிலிருந்து, இடர்பாடுகளை எதிர்கொள்வோருக்கு உயர்ந்த கல்வி மற்றும் விளையாட்டு வாய்ப்புகளை வழங்கி, மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. சமூக சேவைகளின் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கும், சமூக சமநிலைக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளது.

இப்பள்ளியின், விளையாட்டு திட்டங்களில், 2,359 மாணவர்கள் பங்கேற்று சமூக பங்கேற்பை மேம்படுத்தியுள்ளனர். மேலும், 15 மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு, கல்வியுடன் விளையாட்டையும் ஒருங்கிணைத்து வெற்றியடைய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் ஸ்கூல், பல அரசு மற்றும் தனியார் அமைப்புகளுடன் இணைந்து சமூகத்திற்கு நல்ல வேலை நிலைகளை ஏற்படுத்தியும், கல்வி வாய்ப்புகளை விரிவாக்கியும் வருகிறது. இப்பள்ளியில், வறுமை சோகை நிலையிலிருந்து 452 மாணவர்கள் பங்கேற்றதுடன், இவர்கள் உயர் கல்வியும் விளையாட்டுத் துறையிலும் மேம்பட வழி வகுத்துள்ளது.

உலக பள்ளிகள் உச்சிமாநாடு 2024:

வெற்றியாளர்களும், இறுதிச்சுற்று போட்டியாளர்களும் நவம்பர் 23-24, 2024ல் துபாயில் நடைபெறும் உலக பள்ளிகள் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!