அலங்காநல்லூர் அருகே ,பாலமரத்தம்மன் ,முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.

அலங்காநல்லூர் அருகே ,பாலமரத்தம்மன்  ,முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்.
X
அலங்காநல்லூர் அருகே ,பாலமரத்தம்மன் ,முத்தாலம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அ.புதுப்பட்டி கிராமத்தில் பாலமரத்தம்மன் முத்தாலம்மன் கோவில்களின் மஹா கும்பாபிஷேக விழா

அலங்காநல்லூர், ஆக.21-

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பாலமரத்தம்மன் என்ற சுந்தரவள்ளி அம்மன், முத்தாலம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதில் நான்கு கால யாகபூஜைகளை தொடர்ந்து யாக சாலையில் இருந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி அழகர்கோவில், காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து வானத்தில் கருடன் வட்டமிட புனித நீர் ஊற்றப்பட்டு விமான கலசம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மரியாதைகாரர்கள் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story