பொய்கை விநாயகர் ஆலயத்தில் திருப்பணிக்காக பாலாலய பூஜை
சோழவந்தான் அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோயில் பாலாலய பூஜை கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் குரு மகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்றது
சோழவந்தான் அருள்மிகு பொய்கை விநாயகர் திருக்கோயில் பாலாலய பூஜை கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் குரு மகா சன்னிதானம் தலைமையில் நடைபெற்றது:
மதுரை மாவட்டம், சோழவந்தானில், சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் திருக்கோவில் பாலாலயம் நடைபெற்றது.கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் குரு மகா சன்னிதானம் ஞானகுரு சாத்த ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.காலை சுமார் நான்கு முப்பது மணி அளவில் விநாயகர் பூஜையுடன் யாக நிகழ்ச்சிகள் தொடங்கின. நவக்கோள் வேள்வி பூர்ணாஹூதி நடைபெற்று நிறைவுற்றது.
கடந்த இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று துர்கா லட்சுமி சரஸ்வதி வேள்வி 108 மூலமந்திர வேள்வி நடைபெற்று நிறைவுற்றது. தொடர்ந்து ,புனித நீர் நிரம்பிய தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக வந்து அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
இதில் சக்கரவர்த்தி, திலீபன் சக்ரவர்த்தி, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் , நிர்வாக அதிகாரி இளமதி, ஆலய பணியாளர் பூபதி, சோழவந்தான் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், வார்டு கவுன்சிலர்கள் எம் மருது பாண்டியன் ,எம் வள்ளிமயில், முன்னாள் பேரூராட்சித் தலைவர் முருகேசன், ஐயப்பன், துணைத் தலைவர் அண்ணாதுரை மற்றும் திரளான பக்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை சாய் மகாராஜா டிரஸ்ட் செய்திருந்தனர் .
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu