சோழவந்தான் அரசு கிளை நூலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

சோழவந்தான் அரசு கிளை நூலகத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

சோழவந்தான் நூலகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கம்

சோழவந்தான் நூலகத்தில் போட்டித் தேர்வெழுதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது

சோழவந்தான் நூலகத்தில் போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தான் இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள நூலகத்தில் , உலக புத்தக தினத்தை ஒட்டி போட்டித் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

சோழவந்தான் பேரூராட்சி 8-வது வார்டு கவுன்சிலரும்,எம். வி. எம். கலைவாணி பள்ளி தாளாளருமான, எம். மருதுபாண்டியன் தலைமை வகித்தார். அரசு போட்டித் தேர்வுகளில், பொது நூலகங்களின் பங்கு என்ற தலைப்பில் விவேகானந்தா கல்லூரி, தலைமை நூலகர் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். நூலகர் பாலமுருகன் வரவேற்றார். நூலகர் ஜெயந்தி நன்றி உரை நிகழ்த்தினார். இதில், போட்டித் தேர்வு மாணவர்கள், நூலக வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!